ஆக்சிஜன் & நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பயிற்சி | Enhance Your Oxygen Levels | Sadhguru Tamil
Watch this Video
Sadhguru Tamil
Learn simple practices - Simha Kriya and Sashtanga - designed by Sadhguru to boost your immunity and oxygen levels.
To watch this video in English - https://youtu.be/OluG8T9asl4
ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் சத்குரு வழங்கும் எளிய யோகப் பயிற்சிகள்!
கொரோனா பெருந்தொற்று மக்களை அச்சுறுத்திக் கொண்டு இருக்கின்றது. கொரோனா பாதிப்பிற்கு உள்ளாகுபவர்களுக்கு ஆக்ஸிஜன் குறைபாடு ஏற்படுகிறது. கொரோனாவில் இருந்து மீண்டு வந்தவர்களுக்கும், பெரும்பாலும் சுவாச பிரச்சனைகள் தொடருவதாக தகவல்கள் வருகின்றது.
இந்நிலையில் நம் உடலில் ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கவும், நம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் சத்குரு சில எளிய யோகப் பயிற்சிகளை வழங்குகின்றார்.
சவாலான இந்நேரத்தில் சத்குரு வழங்கும் இந்த எளிய பயிற்சிகள் அனைவருக்கும் அருமருந்தாக அமையும்.
கர்ப்பிணிப் பெண்கள் சாஷ்டாங்கம் மற்றும் மகராசனம் செய்ய கூடாது. ஆனால் சிம்ம கிரியா செய்யலாம்.
சாஷ்டாங்கம் மற்றும் மகராசனம் பயிற்சிகளை காலி வயிற்றோடு செய்ய வேண்டும்.
அதாவது நீங்கள்
முழு உணவு சாப்பிட்டு இருந்தால்,
4 மணிநேரம் இடைவெளிக்கு பிறகும்,
தின்பண்டங்கள் அதாவது, ஒரு பழம் அல்லது சில பிஸ்கெட்கள், இப்படி சாப்பிட்டு இருந்தால் இரண்டரை மணிநேரம் இடைவெளிக்கு பிறகும்,
டீ, காபி போன்ற பானங்கள் அருந்தி இருந்தால் ஒன்றரை மணிநேரம் இடைவெளிக்குப் பிறகும்,
இந்த பயிற்சி செய்யலாம்.
தண்ணீருக்கு இடைவெளி தேவையில்லை.
*************************************************************************
Comments
Post a Comment